மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?-பொதுமக்கள்

மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?-பொதுமக்கள்
x

மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ரெயில்வே கீழ்ப்பாலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலப்பாலம் அருகே பாமணிக்கு செல்லும் சாலையில் ரெயில்வே கீழ்ப்பாலம் அமைந்து உள்ளது. மழை நேரங்களில் இந்த கீழ்ப்பாலத்தில் மழை நீர் 3 அடி உயரத்துக்கு தேங்கி நிற்கிறது. இதை வடிய வைப்பதற்கு உண்டான எந்த வழியும் இல்லாததால் வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை கடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.

இதனால் மேலப்பாலத்தில் இருந்து பாமணி செல்லும் வாகன ஓட்டிகள் மன்னார்குடி மன்னை நகர் பாமணி ஆற்றின் பாலம் வழியாக 2 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டியும் அதனை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்ப்பு

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்றுவதற்கும், மீண்டும் மழை நீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story