குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?- பொதுமக்கள்


குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?- பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:30 AM IST (Updated: 12 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தாமரை குளம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் கிளியனூரில் தாமரைகுளம் உள்ளது. இந்த குளத்தை கிளியனூர் பெருமாள்கோவில் தெரு, டிங்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, தாமரைகுளம் தெரு, மேலத்தெரு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குளம் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தாமரைகுளம் என்ற பெயருள்ள இந்த குளத்தில் ஒரு தாமரை செடி கூட காணப்படவில்லை. மாறாக, குளம் முழுவதும் ஆகாயத்தாமரை மண்டி குளம் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. இதனால் குளத்தை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். குளத்தின் படித்துறை முதல் ஆகாயத்தாமரை அடர்ந்து வளர்ந்துள்ளது. ஆகாயத்தாமரை செடிகள் அழுகி துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story