சாலை பணியை முழுமையாக முடிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை


சாலை பணியை முழுமையாக முடிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
x

சாலை பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாரியம்மன்கோவில் செல்லும் சாலை, சாலக்காரத்தெரு பகுதி சாலை மிகவும் மோசமான நிலையில் காட்சி அளித்து வந்தது. குறிப்பாக சாலைகள் குண்டும், குழியுமாக இருந்ததால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் பழைய மாரியம்மன் கோவில் சாலையில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. ஆனால் சாலக்கார தெரு பகுதியில் மட்டும் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story