குமரலிங்கம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குமரலிங்கம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
போடிப்பட்டி,
குமரலிங்கம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுற்றுலா தலங்கள்
உடுமலையிலிருந்து பழனி செல்லும் முக்கிய வழித்தடத்தில் குமரலிங்கம் பகுதி அமைந்துள்ளது.மேலும் அமராவதி, ஆனைமலை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் தினசரி இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அத்துடன் குமரலிங்கம் பகுதியில் பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளது.இதனால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதில் பலரும் பொது போக்குவரத்தான பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு
ஆனால் குமரலிங்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.அது மட்டுமல்லாமல் பஸ் நிறுத்தம் பகுதியில் தள்ளுவண்டிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன.இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. மேலும் இந்த பகுதியை ஒட்டிய சாலைகள் மிகவும் குறுகியதாக உள்ளது.இதனால் இந்த பகுதியை கடப்பதற்கு வாகனங்கள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் பஸ் நிறுத்தத்துக்கு அருகில் உள்ள பகுதியில் வார சந்தை கூடும் நாட்களில் நெரிசலால் மக்கள் படும் அவதிகள் ஏராளம்.எனவே குமரலிங்கம் பகுதியில் பஸ்களை நெருக்கடி இல்லாமல் நிறுத்தும் வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது'ஆற்றங்கரை நாகரீகம் வளர்ந்த பழமையான நகரம். ஆயிரம் ஆண்டுகள் கடந்த கோயில்கள் உள்ள கோயில் நகரம் என பல வகைகளில் புகழ் பெற்றது குமரலிங்கம் பகுதியாகும். ஆனால் குமரலிங்கம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்படாததால் பலவிதங்களில் இந்த ஊரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. குமரலிங்கத்திலிருந்து மடத்துக்குளம் செல்லும் வழித்தடத்தில் உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பஸ் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.ஆனால் பல ஆண்டுகளாக இந்த திட்டம் செயல் வடிவம் பெறாமலேயே உள்ளது. எனவே குமரலிங்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், இந்த பகுதியை மேம்பாடு அடைய செய்யும் வகையிலும் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.
----