கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க குவியும் மக்கள்


கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க குவியும் மக்கள்
x
தினத்தந்தி 25 July 2023 1:30 AM IST (Updated: 25 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க மக்கள் குவிந்தனர்.

தேனி

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வங்கிக்கணக்கு அவசியம். வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே வங்கிக்கணக்கு இருந்தும் அது செயல்பாட்டில் இல்லாதவர்கள் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கவும், பழைய கணக்கை மீட்டெடுக்கவும் வங்கிகளுக்கு படையெடுத்தனர். இந்தநிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் இல்லாமல், 'ஜீரோ பேலன்ஸ்' என்ற அடிப்படையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. இது மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையின் என்ற போதிலும் தேனி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரே நாளில் 800 கணக்குகள் தொடங்கப்பட்டன. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் 2,800-க்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story