பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்கள்


பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்கள்
x

பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் கரூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்கள் கூட்டம் அலை மோதியது.

கரூர்

கூட்டம் அலைமோதல்

கரூர் மாவட்டத்தில் தொழில் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பல இடங்களில் தங்கியுள்ள வெளியூர் வாசிகள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் கரூரில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். அந்தவகையில் பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, நேற்று முன்தினம் முதலே கரூரில் பஸ் நிலையத்தில் இருந்து, சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து சென்று வருகிறார்கள் இதேபோல் நேற்றும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கரூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர். பின்னர் தங்கள் செல்லும் ஊர்களின் பஸ்களை பிடித்து சென்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலையாகவே காணப்பட்டன. மேலும், அவ்வபோது ஒலிப்பெருக்கி மூலம் போக்குவரத்து அதிகாரிகள் எந்தெந்த பஸ்கள் எங்கு செல்கிறது. பொதுமக்கள் எங்கு என்று பஸ்களில் ஏற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.

ரெயில் நிலையம்

கரூர் ரெயில்நிலையத்தில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கரூர் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து சென்று காண்காணித்தனர்.


Next Story