வார விடுமுறையான நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பொதுமக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்


வார விடுமுறையான நேற்று    பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பொதுமக்கள்    குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையான நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பொதுமக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து சுரபுன்னை காடுகளை பார்த்து மகிழ்ந்தனர்.

கடலூர்

புவனகிரி,

சுற்றுலா மையம்

சிதம்பரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சுரபுன்னை காடுகளை காண உள்ளுர், வெளியூர் மற்றும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்டிகை அல்லது விடுமுறை நாட்களில் வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்துறை மூலம் இயக்கப்பட்டு வரும் படகுகளில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளையும், இயற்கை அழகையும் பார்த்து மகிழ்ந்து செல்வார்கள்.

அலை மோதிய கூட்டம்

தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதாலும் வழக்கத்தை விட நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. குடும்பத்தினர்களுடன் சுற்றுலா மையத்துக்கு வந்திருந்தவர்கள் தங்களது குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவில் விளையாடியும், கடல் கன்னி சிலை முன்பு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார் மற்றும் கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.


Next Story