உடுமலையில் தீபாவளிக்கு ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.


உடுமலையில் தீபாவளிக்கு ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
x

உடுமலையில் தீபாவளிக்கு ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

திருப்பூர்

உடுமலை,

உடுமலையில் தீபாவளிக்கு ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தீபாவளி

உடுமலையில் வ.உ.சி.வீதி, பழனிசாலை,

சீனிவாசா வீதி உள்ளிட்ட வீதிகளில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ளன.வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகளும் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி மத்திய பஸ் நிலையம்பகுதி, கல்பனா சாலை, சீனிவாசா வீதி,

வ.உ.சி.வீதி உள்ளிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்த சாலைகளில் தற்காலிக ரெடிமேட் துணி கடைகள் உள்ளிட்ட கடைகளும் அமைக்கப்படும்.அதேபோன்று இந்த ஆண்டும் இந்த சாலைகளில் தற்காலிக கடைகள்அமைக்கப்பட்டுள்ளன.இந்த சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

வாகனங்கள் செல்ல தடை

அதனால் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்கள் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டுகளைப்போன்று இந்தஆண்டும், வ.உ.சி.வீதி-

பழனிசாலை-சத்திரம் வீதி சந்திப்புகள், வ.உ.சி.வீதி-

சீனிவாசாவீதிசந்திப்பு,

கல்பனா சாலை-சீனிவாசா வீதி சந்திப்பு, பழனி சாலை-கல்பனாசாலை சந்திப்பு, கல்பனாசாலை-

கச்சேரி வீதி சந்திப்பு ஆகிய இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.இந்த சாலைகளின் உள்பகுதிக்கு நடந்து செல்வதற்கு மட்டும் வழிவிட்டு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

அத்துடன் கல்பனா சாலை, சீனிவாசாவீதி, வ.உ.சி.வீதி ஆகியபகுதிகளில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

போலீசார் கண்காணிப்பு

அதனால் இந்த வீதிகளின் சந்திப்பு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மேடை அமைத்து கண்காணிப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

இந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.அத்துடன் சீருடை அணியாத போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வீதிகளில்ஜவுளிகடைகள்,

அழகுசாதன பொருட்கள் விற்பனை கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் வரத்தொடங்கியது.இரண்டொரு நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்

---

Image1 File Name : 13410371.jpg

---

Image2 File Name : 13410372.jpg

----

Reporter : A. Stephen Location : Tirupur - Udumalaipet - Udumalai


Next Story