நாளை பள்ளிகள் திறப்பு: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; கூடுதல் பஸ்கள் இயக்க திட்டம்
வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை,
2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளன. இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
நாளை கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்துவிட்டனர்.
விடுமுறை நிறைவடைவதால் பலரும் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சுமார் 250 பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 250 பஸ்களை இயக்கப்படுகின்றன .
மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் இருக்குமாறும்
வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.