மக்கள் நேர்காணல் முகாம்
கண்ணுக்குடி மேற்கு கூடுதல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் 4-ந் தேதி நடக்கிறது
தஞ்சாவூர்
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது வாரத்தில் நடைபெற்று வந்தது. இந்த முகாமை தொடர்ந்து நடத்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாகப்பிரிவு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தொண்டராம்பட்டு சரகம் கண்ணுக்குடி மேற்கு கூடுதல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story