குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

கிருஷ்ணராயபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

சாலை மறியல்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட சுக்காம்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை.

இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்த வந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதியம் குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் சுக்காம்பட்டி பிரிவு சாலையில் அமர்ந்து திடீரென மறியல் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி, லாலாபேட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story