புதிதாக செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்


புதிதாக செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்
x

திருவாரூர் அருகே புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் அருகே புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரம்

திருவாரூர் அருகே சுந்தரவிளாகம் பகுதியில் ஒருவருடைய வீட்டிற்கு பின்புறம் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு நீண்ட நாட்களாக முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படும் என பல்வேறு முறை அந்த இடத்தின் உரிமையாளரிடம் கிராம மக்கள் தெரிவித்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.இந்த நிலையில் நேற்று புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தில் ஒன்று திரண்ட கிராம மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

கிராமத்திற்கு நடுவே செல்போன் கோபுரம் அமைப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களின் வேண்டுகோளை அடுத்து புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.


Next Story