பரமக்குடி நகராட்சி அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்


பரமக்குடி நகராட்சி அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தங்கள் கோரிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த வராததால் ஆத்திரம் அடைந்த மக்கள் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

தங்கள் கோரிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த வராததால் ஆத்திரம் அடைந்த மக்கள் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அலுவலகத்தை பூட்டினர்

பரமக்குடி நகராட்சிக்குட்பட்டது 6-வது வார்டு. இங்குள்ள தேவேந்திரர் நகர் பகுதி மக்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி அப்பகுதி மக்கள் பரமக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்பு அவர்கள் கொண்டு வந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை தரையில் தூக்கி வீசி எறிந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்க சென்றனர்.

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் நகராட்சி அலுவலகத்தை இழுத்து பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை கண்டித்து அலுவலக கதவை திறக்குமாறு கூறினர்.

பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்தனர்

இது பற்றிய தகவல் அறிந்ததும் நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றனர்.


Related Tags :
Next Story