சொந்த செலவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய கிராம மக்கள்
நீடாமங்கலம் அருகே சாலை அமைக்கும் பணிக்காக சொந்த செலவில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடிகளை கிராம மக்கள் அகற்றினா்.
நீடமங்கலம், ஜூன்.2-
நீடாமங்கலம் அருகே சாலை அமைக்கும் பணிக்காக சொந்த செலவில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடிகளை கிராம மக்கள் அகற்றினா்.
குண்டும் குழியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கோரையாறு தென்கரை கண்ணம்பாடியிலிருந்து தண்டாலம் பாலம் வரை சாலையின் இரு புறங்களிலும் மண்டி கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி குண்டும் குழியுமான கப்பி சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என காரிச்சாங்குடி, மேலாளவந்தசேரி மடப்புரம், சமுதாயக்கரை உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று நீடாமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற உத்தரவாதம் அளித்தனர்.
சொந்த செலவில்
இதைத்தொடர்ந்து மேலாளவந்தசேரி ஊராட்சி தலைவர் ஷீலா மதிவாணன் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி சொந்த செலவில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள், நுனா மரங்கள், செடிகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றி சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் சாலையை சுத்தம் செய்தனர். சாலை அமைக்க அதிகாரிகளுக்கு உதவியாக சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடிகளை சொந்த செலவில் அகற்றிய கிராம மக்களின் செயல் அனைவரையும் கவர்ந்து உள்ளது