சாலைகளை சீரமைக்கக்கோரி மறியல்


சாலைகளை சீரமைக்கக்கோரி மறியல்
x

தஞ்சை அருகே சாலைகளை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே சாலைகளை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலைகள் சேதம்

தஞ்சையில் இருந்து கள்ளப்பெரம்பூர் செல்லும் சாலையில் உள்ள பரிசுத்தம் நகர், களிமேடு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பரிசுத்தம் நகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை முதல் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள பரிசுத்தம் நகரில் அந்த வழியாக வந்த பஸ் மற்றும் இதர வாகனங்களை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பார்திபன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்போில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் ஒரு பகுதி சாலையை உயரமாக அமைத்தும், மறுபகுதி சாலை அமைக்காதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. கழிவுநீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் மழைக்காலங்களில் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story