குடிநீர் வராததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் வராததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள்  மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:30 AM IST (Updated: 16 Jun 2023 2:18 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே எடையூரில் குடிநீர் வராததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்

முத்துப்பேட்டை;


முத்துப்பேட்டை அருகே எடையூரில் குடிநீர் வராததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் ஊராட்சி மஞ்சுகோட்டகம் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் எடையூர் வேளாண்மைத்துறை அலுவலகம் எதிரே கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், எடையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story