அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு கலெக்டரிடம் மனு
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு கலெக்டரிடம் மனு
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் கோல்டன் நகர், காலேஜ் ரோடு, மங்கலம் ரோடு, மாஸ்கோ நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:- நாங்கள் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். தினசரி வேலைக்கு செல்லும் எங்களால் வீட்டு வாடகை கொடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story