பல்லடத்தில் இருந்து அவினாசி ரோடு வழியாக கோவைக்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை


பல்லடத்தில் இருந்து அவினாசி ரோடு வழியாக கோவைக்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
x

பல்லடத்தில் இருந்து அவினாசி ரோடு வழியாக கோவைக்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்

பல்லடம்

பல்லடத்திலிருந்து, அவிநாசி ரோடு வழியாக கோவைக்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லடம் மிக வேகமாக வளைந்து வரும் நகரமாகும், திருப்பூர் மாவட்டத்தின் பெரிய சட்டமன்றத் தொகுதியான இதில் 3,62500 வாக்காளர்கள் உள்ளனர் பல்லடம் நகர பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டமக்கள் வசிக்கின்றனர், பல்லடம் நகரில் பல்வேறு வசதிகள் இருந்தும் மருத்துவம், மேல்நிலைக்கல்வி போன்றவைக்கு கோயம்புத்தூர் செல்ல வேண்டி உள்ளது, பல்லடம் வழியாக தினமும் சுமார் 200 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோயம்புத்தூர் செல்கின்றன இவைகள் சூலூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் வழியாக காந்திபுரம் செல்கின்றன, ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகள், கல்லூரிகள் அவிநாசி ரோட்டில் உள்ளது இங்கு செல்வதற்கு பல்லடம் மக்கள் காந்திபுரம் சென்று மீண்டும் அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து பின்னர் அவிநாசி ரோடு வழியாக சென்று மருத்துவமணைகள், கல்லூரிகளுக்கு செல்லவேண்டியுள்ளது, இதனால் கடும் அலைச்சல் மற்றும் கால விரையம் ஏற்படுகிறது. எனவே பல்லடத்திலிருந்து கோயம்புத்தூர் செல்ல அவிநாசி ரோடு வழியாகவும் பஸ்களை இயக்கினால், பல்லடம் மக்களுக்கு கடும் அலைச்சல் மற்றும் கால விரையம் இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் உதாரணமாக பல்லடத்திலிருந்து மங்கலம், கருமத்தம்பட்டி வழியாகவும், பல்லடத்திலிருந்து சூலூர், முத்து கவுண்டம்பாளையம் வழியாகவும், பல்லடம், காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி வழியாகவும், அவிநாசி ரோடு வழியாக கோயம்புத்தூர்க்கு பஸ்களை இயக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் பல்லடம் பகுதியில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், மருத்துவ வசதிக்கு செல்லும் பொதுமக்களுக்கும் பேருதவியாக இருக்கும், என பல்லடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story