இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு
இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு
காங்கயம்
காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த வெள்ளகோவில் உள் வட்டத்தைச் சேர்ந்த பகுதிகளுக்கு ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
வெள்ளக்கோவில்- உப்புப் பாளையம் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு நிலமெடுப்பு செய்யப்பட்டு 61 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் தகுதி இல்லாத 20 நபர்களின் பட்டா ரத்து செய்யப்பட்டும், வெளியூர் நபர்களை சேர்ந்த சொந்த வீடு இருக்கும் பலருக்கும் பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்யவும், உப்புப்பாளையம், குட்டக்காட்டு புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கக் கோரியும் மனு கொடுக்கப்பட்டதில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உப்புப்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.
மேலும் வேலம்பாளையம் பகுதியில் உள்ள நில உச்சவரம்பு பூமியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி கடந்த 50 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு இதுவரை பட்டா எதுவும் வழங்கப்படவில்லை. உப்புபாளையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட 11 பேருக்கு இன்னமும் நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை. எனவே மேற்கண்ட சொந்த வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும், பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நிலத்தை அளந்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
----------------