யானைகளை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
யானைகளை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குரல் செய்து பதிவு அனுப்பி உள்ளார்.
குரல் பதிவு
நாட்டறம்பள்ளி பகுதியில் புகுந்த காட்டு யானைகலை விரட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இதணை முன்னிட்டு யானைகளை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சமூக வலைதளங்களில் குரல் பதிவு செய்து அனுப்பியுள்ளார்
அதில் பொதுமக்கள் யானைகளை பார்க்க வரும்போது நீங்கள் பண்ற அதிக சத்தத்தால் யானைக்கு தொந்தரவு செய்வதால் நமது மாவட்டத்திற்குள் நுழையக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது.
பொது மக்கள் தயவு செய்து நீங்கள் வீட்டுக்குள்ளே இருந்தால் யானை தேசிய நெடுஞ்சாலையை கடந்து காட்டிற்குள் சென்றிருக்கும். இப்போது முக்கியமான பிரச்சினை என்னவென்றால் யானையை தேசிய நெடுஞ்சாலையில் கடக்க வைக்க வேண்டும். தயவு செய்து பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். நீங்கள் 2 மணி நேரத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் யானை சென்று இருக்கும்.
ஒத்துழைப்பு தர வேண்டும்
பொது மக்கள் தொந்தரவு கொடுத்ததால் யானை ஊருக்குள் நுழைந்து விட்டது. யானை ஏற்கனவே ஆக்ரோஷமாக உள்ளது. நீங்கள் வீட்டிற்கு உள்ளே இருங்கள். டார்ச் அடித்து பார்ப்பது, எட்டி பார்ப்பது கூடாது. யானை மீது கல் மற்றும் பாட்டில் எறிய வேண்டாம். அப்படி அதன் மீது எரிந்தால் மீண்டும் ஆக்ரோஷாமாக உங்களை தாக்க வரும். அதனால் பொது மக்கள் தயவு செய்து ஒத்துழைப்பு தர வேண்டும். யானையை யாராவது பார்த்தால் உடனடியாக தகவல் தெரியுங்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளர்.