டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 16 Sept 2023 3:03 PM IST (Updated: 16 Sept 2023 7:32 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுததப்பட்டு உள்ளது. இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார் . ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. எனவே செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. டெங்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.

கொசு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு உள்ளது. டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் எல்லைகள் கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story