போகிப்பண்டிகை நாளில் பொதுமக்கள் குப்பைகளை கொளுத்த கூடாது
மயிலாடுதுறை நகரில் போகிப்பண்டிகை நாளில் பொதுமக்கள் குப்பைகளை கொளுத்த கூடாது என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை நகரில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து வரும் குப்பைகளை, போகிப்பண்டிகை நாளில் கொளுத்த கூடாது. தங்கள் பகுதியில் வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தினசரி வரும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் பொது சுகாதாரச்சட்டம் 1939-ன்படி நீதிமன்ற வழக்கு தொடர்வதுடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் வரும் தூய்மைப் பணியாளர்களிடம் மட்டுமே தரப்பட வேண்டும் என பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story