உடுமலை வ.உ.சி.வீதியில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை வ.உ.சி.வீதியில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி
உடுமலை வ.உ.சி.வீதியில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வ.உ.சி. வீதி
உடுமலை நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான சாலைகளில் வ.உ.சி. வீதியும் அடங்கும். இந்த சாலையில் அரசு ஆஸ்பத்திரி, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பல்வேறு தரப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளும் உள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவும், பொருட்களை வாங்குவதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையின் வழியாக வந்து செல்கின்றனர். இதனால் காலை முதல் இரவு வரையிலும் வ.உ.சி சாலை பொதுமக்கள் மற்றும் வாகன நெருக்கம் மிகுந்து காணப்படுகிறது.
குடிநீர் குழாய் அமைக்கும் பணி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வ.உ.சி சாலையில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப்பணி நிறைவடைந்த பின்பும் சாலையை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாக முன் வரவில்லை.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதுடன் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அத்தியாவசிய தேவையான குடிநீர் குழாய் அமைப்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் அந்த பணி முடிவடைந்து பின்பு போக்குவரத்து நெருக்கம் மிகுந்த வ.உ.சி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டியதும் நிர்வாகத்தின் கடமையாகும்.
ஆனால் பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டாத நிர்வாகம் சாலை சீரமைப்பு பணியை கிடப்பில் போட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவசரகால ஆம்புலன்சு மற்றும் தீயணைப்புத்துறை சேவையை பெற முடியாத சூழல் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
உடுமலை பகுதியில் தொடங்கப்படும் எந்த ஒரு பணியும் விரைந்து முடிக்காமல் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்படுவதற்கு இந்த சாலையின் அலங்கோல காட்சியே சான்றாகும். நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிப்படைவது வேதனை அளிக்கிறது.
எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி வீதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பகுதியை விரைந்து சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.