அமிர்தி பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்
காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.
இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய், சிறுவர்களுக்கு 5 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 25 ரூபாய், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான இன்று அமிர்தி உயிரின பூங்கா விடுமுறை அளிக்காமல், வழக்கம்போல் செயல்பட்டது.
சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்தினருடன் அதிகளவில் குவிந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.
இன்று ஒரு நாள் மட்டும் 937 குழந்தைகள், 4882 பெரியவர்கள், இருசக்கவ வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் பார்க்கிங் கட்டணத்துடன் சேர்த்து ரூ.96 ஆயிரத்து 860 வசூலாகியுள்ளது.
அமிர்தி வனச்சரக அலுவலர் முருகன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.