பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்


பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

வெயிலின் தாக்கம்

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் வயதானவர்கள், பல்வேறு நோய் தாக்கத்தில் அவதிப்பட்டு வருபவர்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் வெளியில் வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு மட்டும் வெளியே வந்து செல்கின்றனர். மேலும் கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கடைவீதிகளில் வர்த்தகம் பாதிப்பு

காலை மற்றும் மாலை வேலைகளில் மட்டுமே கடைவீதிக்கு வந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பனை நுங்கு, இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு போன்ற குளிர்ச்சியான பொருட்களை நாடி செல்கின்றனர்.

மேலும் இந்த கோடை வெயிலின் கடுமையான தாக்கத்தால் வேதாரண்யம் அருகே உள்ள கடினல்வயல், அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறுகிறது.


Next Story