மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமை இ-சேவை தளத்தை உருவாக்கியுள்ளது. கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கி கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவை பெற பதிவு செய்யலாம். மாற்றுத்திறனாளிகள் பயன்பெற அருகே உள்ள இ-சேவை மையம் அல்லது www.tnesevai.tn.gov.in/citizen/registration.apx என்ற இணையதளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு மாதம் முதல் இத்திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும். எனவே மாற்றுத்திறனாளி பயனாளிகள் நல உதவி கோரி இ-சேவை மையம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328 - 225474 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.