மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 100 நாள் வேலை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து பேச முயன்றதாக தெரிகிறது. அப்போது கூட்டத்தை நடத்திய அலுவலர்கள், மாற்றுத்திறனாளி அல்லாத அந்த நிர்வாகியை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைக்கவில்லை என்றும், இதனால் அவர் கூட்டத்தில் பேசக்கூடாதும் என்றும், மேலும் அவரை கூட்டத்தை விட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் முகாமினை தரைத்தளத்தில் நடத்துமாறும், கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story