மதுரை ஐகோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் வழக்குகளுக்கு சுமுக தீர்வு


மதுரை ஐகோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் வழக்குகளுக்கு சுமுக தீர்வு
x

மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.

மதுரை


மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

மதுரை ஐகோர்ட்டில் நேற்று லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடந்தது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் விஜயகுமார், தனபால் ஆகியோர் அடங்கிய 2 அமர்வுகள் பல்வேறு வழக்குகளை விசாரித்தன.

இந்த அமர்வுகளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜான் சந்தோசம், மதுரசேகரன், வக்கீல்கள் காஜாமைதீன், பாலசுப்பிரமணியன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

மொத்தம் 158 வழக்குகள் சுமுக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

பயனாளிகளுக்கு இழப்பீடு

முடிவில் 15 வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டு, அதன் மூலம் ரூ.2 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 253-ஐ இழப்பீடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த லோக் அதாலத் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் (நீதித்துறை) பொறுப்பு அதிகாரி வெங்கடவரதன் செய்திருந்தார்.


Related Tags :
Next Story