மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப் பிராங்கிளின்கென்னடி முன்னிலை வகித்தார். முகாமில் 14 மனுக்களை பெறப்பட்டது. இதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கூறுகையில்,
நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக வந்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நேரடியாக வர முடியாதவர்கள், அவசர உதவிக்கு 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.