அம்பலவயல் அரசு பள்ளியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
அம்பலவயல் அரசு பள்ளியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அம்பலவயல் அரசு பள்ளியில் வருகிற 31-ந் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று பொதுமக்களிடம் வருவாய்துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. கூடலூர் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் லோகநாதன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் லட்சுமிசங்கர், கிராம நிர்வாக அலுவலர் சீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சாலை நடைபாதை, மின்சாரவசதி, முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் குறித்து 45 மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story