மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அம்பையில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது
திருநெல்வேலி
அம்பை:
அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.்
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-
நல்லாட்சி கண்காணிப்பு வாரம் கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு குறை மற்றும் புகார் தொடர்பான மனுக்கள் வழங்கலாம். பெறப்படும் மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story