மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் தலைமையில் நடந்தது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங் தலைமை தாங்கினார்.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 536 மனுக்கள் பெறப்பட்டது.
உடனடி நடவடிக்கை
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன், மாவட்ட பழங்குடி நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.