மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கான ஆணை, 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story