மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 121 மனுக்கள் பெறப்பட்டன
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல்,முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை, வேலை வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 121 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் லலிதா, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story