போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர் அனிதா முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் ராஜேந்திரன், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story