மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், கோரி 67 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 32 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 53 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 30 மனுக்களும் உள்பட மொத்தம் 228 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி உள்பட மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 650 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.