மக்கள் நேர்காணல் முகாம்
மக்கள் நேர்காணல் முகாம்
திருவாரூர்
திருமக்கோட்டை
கோட்டூர் ஒன்றியம் அக்கரை கோட்டகம் ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. சமூக பாதுகாப்புத்துறை தனித்துணை கலெக்டர் கண்மணி தலைமை தாங்கினார். மாரிமுத்து எம்.எல்.ஏ., கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, ஒன்றிய தி.மு.க. செயலாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் முத்தமிழ்செல்வி வரவேற்றார். முகாமில் 139 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தாசில்தார் ஜீவானந்தம், ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story