மக்கள் நேர்காணல் முகாம்
மக்கள் நேர்காணல் முகாம்
குடவாசல்
குடவாசல் தாலுகாவை சேர்ந்த பிரதாபராமபுரம், புளியஞ்சேரி, விக்கிரபாண்டியம் ஆகிய கிராம மக்களின் நலனுக்காக வருவாய்த்துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் பிரதாபராமபுரம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) மணிவேலன் தலைமை தாங்கினார். குடவாசல் தாசில்தார் (பொறுப்பு) தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஊராட்சி தலைவர்கள் ஜெயராமன்(விக்கிரபாண்டியம்), ராதாகிருஷ்ணன்(பிரதாபராமபுரம்), ஒன்றியக்குழு உறுப்பினர் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 11 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 22 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 18 ேபருக்கு விவசாய இடுெபாருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மணிவேலன் வழங்கினார். இதில் வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வம், துணை வேளாண்மை அலுவலர் ரவி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.