மக்கள் நேர்காணல் முகாம்


மக்கள் நேர்காணல் முகாம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நரிமணம், கீழப்பிடாகை ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 6¾ லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நரிமணம், கீழப்பிடாகை ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 6¾ லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலஅலுவலர் ஜமுனாராணி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் ராஜசேகர், முத்து முருகேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் வரவேற்றார்.

இதில் வருவாய்த்துறை சார்பில் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 25 பயனாளிகளுக்கும், 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜமுனாராணி வழங்கினார்.

பொதுமக்களிடமிருந்து மனுக்கள்..

இதில் மண்டல துணை தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர்கள் சுந்தரவளவன், புனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மஞ்சுளா மாசிலாமணி, வேளாண்மை உதவி அலுவலர் ஜாக்கீர், தோட்டக்கலை உதவி அலுவலர் சரவணஅய்யப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.

கீழப்பிடாகை ஊராட்சி

இதேபோல கீழையூர் ஊராட்சி ஒன்றியம் கீழப்பிடாகை ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமிற்கு கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு நலதிட்ட தனிதாசில்தார் அமுதவிஜயரங்கன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பானுகோபாலன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு 2 லட்சத்து 5ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 21 மனுக்கள் பரிசீளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள 30 மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் கவுசல்யாஇளம்பருதி, ஒன்றியகவுன்சிலர் கமலா, ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகி, கிராம நிர்வாக அலுவலர்கள் கோபிநாத், செல்வகுமார், செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Related Tags :
Next Story