மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
மதுரை
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதிமய்யம் சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் அழகர் தலைமை தாங்கினார். மேற்கு தொகுதி மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்டச்செயலாளர் மணி, அயூப் கான், கதிரேசன், சிவராஜன் கணேஷ்குமார், ராஜா, சீனிவாச பாபு, மண்டல அமைப்பாளர்கள் ராஜா, நாகநாதன், கிருஷ்ணகுமார், பரணி ராஜன், பத்மாவதி, சிவ பாலகுரு, ஜாபர் மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தொண்டர் ஒருவர் கமல்ஹாசன் உருவப்படத்துடன் 12 கரங்களுடன் சூலாயுதத்தை ஏந்தி கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story