தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி


தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி
x

திருவண்ணாமலையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட வன அலுவலர் அருண்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேஷ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் அவரது தலைமையில் தூய்மை உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்து தூய்மை பணியில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டார்.

மேலும் முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அவர் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.

இதில் திருவண்ணாமலை வனசரக அலுவலர் சீனிவாசன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வனத்துறையினர், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை அருணை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story