பெரம்பலூர் மாவட்டம் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை


பெரம்பலூர் மாவட்டம் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை
x

பிளஸ்-1 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

பெரம்பலூர்

தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு மே மாதம் பிளஸ்-1 எனப்படும் 11-ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-2 வகுப்புக்கு கடந்த 20-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வுக்கு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சரியாக காலை 10 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது.

அறிவிப்பு பலகையில்...

பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டிருந்ததால் மாணவ-மாணவிகள், அதனை பார்த்து தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். சில மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் செல்போன்கள் மூலம் இணையதள முகவரியில் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர். பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு அனுப்பப்பட்டது.

பெரம்பலூர் 95.56 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வினை 79 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 922 மாணவர்களும், 3 ஆயிரத்து 740 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 671 மாணவர்களும், 3 ஆயிரத்து 651 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 322 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 95.56 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 93.60 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 97.62 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

மாநிலத்திலேயே பெரம்பலூர் முதலிடம்

ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்திலேயே முதலிடமும், 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்திலேயே 2-ம் இடமும் பிடித்த பெரம்பலூர் மாவட்டம் நேற்று வெளியான பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வு முடிவிலும் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கொரோனாவினால் பிளஸ்-1 வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 17-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது மாநில அளவில் 16 இடம் முன்னேறி பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளதால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். ச


Next Story