பெரம்பலூரில் மழை வெளுத்து வாங்கியது
பெரம்பலூரிலும் மழை வெளுத்து வாங்கியது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 3.15 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. அப்போது இடையே இடையே இடி இடித்தது. மின்னலும் ஏற்பட்டது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பலத்த மழை பெய்யும் போது வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த பலத்த மழையினால் தற்போது அறுவடைக்கு தயராகி உள்ள நெற் பயிர்கள், மக்காச்சோளம் ஆகியவை பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாடாலூர்-3, அகரம்சீகூர்-6, புதுவேட்டக்குடி-4, பெரம்பலூர்-2.
Related Tags :
Next Story