பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகம் முற்றுகை
பேரணாம்பட்டு அருகே விவசாயி கைது செய்யப்பட்டதை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேரணாம்பட்டு அருகே விவசாயி கைது செய்யப்பட்டதை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகை போராட்டம்
பேரணாம்பட்டு அருகே ேசராங்கல் கிராமத்தில் வேணுமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தையின் உடல் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. இந்த நிலையில் வேணுமூர்த்தியின் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் மோகன் பாப என்பவர் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க ஒலி எழுப்பும் கருவியை வனத்துறை அனுமதியின்றி பொருத்தியதாக பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் கைது செய்தார்.
விவசாயி மோகன் பாபுவை கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் நேற்று பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்தை மசிகம் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் டில்லி ராஜா முன்னிலையில், சேராங்கல் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது வனத்துறை அதிகாரிகள் யாரும் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வில்லை இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமரசத்தை ஏற்காமல் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வனத்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக விவசாயிகள் வன விலங்குகளை தடுக்க ஒலி எழுப்பும் கருவி எவ்வாறு இயங்குகிறது என பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.