கவுன்சிலர்கள் எதிர்ப்பால் பேரணாம்பட்டு நகர மன்ற கூட்டம் தள்ளிவைப்பு


கவுன்சிலர்கள் எதிர்ப்பால் பேரணாம்பட்டு நகர மன்ற கூட்டம் தள்ளிவைப்பு
x

கவுன்சிலர்கள் எதிர்ப்பால் பேரணாம்பட்டு நகர மன்ற கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சி ஊழியர்கள் நேற்று நகராட்சியில் நிறைவேற்றப்படக்கூடிய பொருள், தீர்மானங்கள் குறித்த அஜெண்டாவை கவுன்சிலர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி நகராட்சி கூட்டம் மாலை 3 மணிக்கு நடக்க இருப்பதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். அவர்கள் வழங்கிய அஜெண்டா வில் 28-ந் தேதிகூட்டம் நடப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த 12 நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி தலைவர் அறைக்கு அங்கிருந்த தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவர் ஆலியார்ஜூ பேர் அஹம்மத் ஆகியோரிடம் எதற்கு மன்ற கூட்டம் அவசர அவசரமாக நடத்த வேண்டும், கூட்டம் நடத்துவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அஜெண்டா வழங்கி தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், இன்றைக்கே அஜெண்டாவை வழங்கி இன்றைக்கே கூட்டம் நடத்தினால் எப்படி, வரவு செலவு கணக்கை கொடுத்து விட்டு கூட்டத்தை நடத்துங்கள் என்றனர். மேலும் கூட்டத்தை தள்ளி வையுங்கள் என கவுன்சிலர்கள் கூறினர். இதனை ஏற்று நகரமன்றக் கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.


Next Story