பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் மாம்பழ கண்காட்சி
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் மாம்பழ கண்காட்சி நடைபெற்றது.
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாம்பழத்தின் பாரம்பரிய ரகங்கள், புதிய மற்றும் கலப்பின ரகங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பழ அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் 185 வகையான மாம்பழ ரகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். பேராசிரியர் ராஜதுரை வரவேற்றார்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். பழ அறிவியல் துறையின் தலைவர் சரஸ்வதி, இணை பேராசிரியர்கள் முத்துராமலிங்கம், சுகன்யா கண்ணா ஆகியோர் மாம்பழத்தின் சத்து, மருத்துவ குணங்கள், புதிய ரக மேலாண்மை, மாம்பழத்தில் பூச்சி கட்டுப்பாடு குறித்து பேசினர். முடிவில் இணை பேராசிரியர் விஜய சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார். இந்த கண்காட்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் 250 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.