பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில்வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கு
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கு நடந்தது.
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், தேனி மாவட்டத்தில் ஜி9, செவ்வாழை, நெய் பூவன், நேந்திரம் உள்பட வாழை ரகங்கள் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேனி மாவட்டம் வாழை சாகுபடியில் முதலிடத்தில் உள்ளது. இதில் ஜி9 ரக வாழை 8 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு எக்டேருக்கு 100 முதல் 110 டன் வரை மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்கு லாபகரமாக உள்ளது.
தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானிகள் சிவா, குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பழ அறிவியல் துறை தலைவர் சரஸ்வதி, தொழில் முனைவோர் முதன்மை செயல் அலுவலர் வசந்தன் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் வாழை தொழில் முனைவோர் தலைவர் காசிராஜன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் வாழை மதிப்பு ஊட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.