பெரியகுளம் நகராட்சி கூட்டம்
பெரியகுளம் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
தேனி
பெரியகுளம் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் நாபாண்டி மகேந்திரன், பவானி முருகன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். அப்போது குப்பைகள் சேகரிக்கும் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி மூலம் குப்பைகள் அள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அம்பேத்கர் சிலை அருகே உள்ள உயர் கோபுர மின் விளக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.
Next Story