பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கு:முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கோர்ட்டில் ஆஜர்


பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கு:முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கோர்ட்டில் ஆஜர்
x

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

சேலம்

சேலம்,

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, அருள் எம்.எல்.ஏ, பாட்டாளி மக்கள் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம் ஆகியோர் மீது அனுமதியின்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, கார்த்தி ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதில் வக்கீல்கள் விஜயராசா, குமார், கண்ணன் ஆகியோர் ஆஜராகினர்.


Next Story