பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 12ஆம் நாளான 23-ந் தேதி மாலை 6மணிக்கு மணப்பாடு பங்குதந்தை லெரின்டிரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. நிறைவு நிளான 24-ந் தேதி காலை 7மணிக்கு திருவிழா திருப்பலியும், காலை 9 மணிக்கு புனித அந்தோணியார் சப்பரபவனியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை சுசீலன் தலைமையில் அந்தோணியார் சபை மக்கள், ஊர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story